in

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை…

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை…

 

வங்க கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் காரணமாக கடலூர் மாவட்ட மீன் வளத்துறையினர் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை…

வங்க கடலில் உருவாகி உள்ள டித்வா புயல் காரணமாக கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிகபட்டு உள்ளதாக கூறபடுகிறது.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த சித்திரைபேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, தம்ணாம்பேட்டை, பெரியகுப்பம் ஆகிய பகுதி கடற்கரையில் கடல் அலைகள் இரண்டு முதல் மூன்று மீட்டர் உயரம் வரை எழும்பி ஆர்பரித்து வருகிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட மீன் வளத்துறை அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் அதிக அளவில் காற்று வீசகூடும் என்பதால், அதன் காரணமாக கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், கடும் கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாகவும், மீன் பிடி இறங்கு தளம் மற்றும் மீனவ கிராமங்களில் நிறுத்தபடும் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன் வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

What do you think?

சிதம்பரம் அருகே பெரியப் பட்டு கிராமத்தில் உள்ள ஆலோடி சாப் தர்காவில் சந்தனக்கூடு விழா

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அதிரடி பரவலாக சாரல் மழை