குடோனில் உரிமம் இன்றி வைக்கப்பட்டிருந்த 31000 கிலோ உரங்கள் பறிமுதல்
தஞ்சையில் குடோனில் உரிமம் இன்றி வைக்கப்பட்டிருந்த 31000 கிலோ உரங்கள் பறிமுதல் செய்து வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை
தஞ்சாவூர் புதுப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏராளமான பொருள் இருப்புக் குடோன் உள்ளது. இந்த குடோன்களில் இன்று வேளாண் உதவி இயக்குனர் செல்வராசு தரக்கட்டுப்பாடு மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு குடோனில் எந்தவித உரிமமும் இன்றி வைத்திருந்த 30900 கிலோ உரங்கள் மற்றும் 550 லிட்டர் திரவ உரங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் செல்வராசு தரக்கட்டுப்பாடு அளித்த பேட்டியில் புதுப்பட்டினம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள குடோன்களில் ஆய்வு செய்தோம்.
அதில் ஒரு குடோனில் எந்தவித உரிமமும் இன்றி வைக்கப்பட்டிருந்த 30900 கிலோ உரம் மற்றும் 550 லிட்டர் திரவ உரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் இது போன்று உரிமம் இல்லாமல் வைக்கப்பட்டுள்ள உரங்களை வாங்க கூடாது.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட உரங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படும். அந்த ஆய்வின் முடிவு வந்த பிறகு இது போலி உரமா அல்லது பயன்படுத்தக்கூடிய உரமா என்பது போன்ற விவரங்கள் தெரியவரும். அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை அமையும். இவ்வாறு அவர் கூறினார்.


