எடப்பாடி பழனிச்சாமி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு
தஞ்சை காட்டூர் கிராமத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு.
நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மணிகளை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தால் மேலும் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் அனைத்தும் உடனடியாக கொள்முதல் செய்யப்படுகிறதா?
ஒரு நாளைக்கு எத்தனை மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. மழையில் நனையாமல் இருக்க பாதுகாப்பான முறையில் தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளதா என விவசாயிகளிடம் கேட்டிருந்தார் அதற்கு விவசாயிகள் கண்ணீருடன் எங்கள் நெல்மணிகள் அனைத்தும் முளைத்து வீணாக கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அழுகி வீணாக கூடிய சூழ்நிலையும் உள்ளது இதே மழை தொடர்ந்தால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் எனவும் உடனடியாக எங்கள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என காலில் விழுந்து கதறி கண்ணீர் மல்க விவசாயிகள் தெரிவித்தனர்.


