மயிலாடுதுறை, சீர்காழி சுற்று வட்டாரப் பகுதிகளில் விடிய, விடிய கனமழை
மயிலாடுதுறை, சீர்காழி சுற்று வட்டாரப் பகுதிகளில் விடிய, விடிய கனமழை மாவட்டத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 65.80 மிமீ மழைப்பொழிவு. தொடர் மழையால் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் இளம் சம்பா பயிர்களை மழை நீர் சூழ்ந்துள்ளது.
வங்ககடலில் நீடிக்கும் காற்றழுத்த தழுவு பகுதி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் எனவும், குறிப்பாக கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 கடலோர மாவட்டங்களில் இன்று அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று தீபாவளி பண்டிகையின் போது பகலில் காலை 10 மணி வரை மழை பெய்த நிலையில் அதன் பிறகு முற்றிலும் மழை நின்றது. பின்னர் நள்ளிரவு முதல் இன்று விடிய, விடிய கனமழை பெய்தது மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், மணல்மேடு, தரங்கம்பாடி. செம்பனார்கோவில், பூம்புகார், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிம் கன மழை பெய்தது. கனமழையினால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.
நகரில் தாழ்வான பகுதி சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது.தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக விட்டு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் இளம் சம்பா பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு
மயிலாடுதுறை – 58.20 மிமீ
மணல்மேடு – 36 மிமீ
சீர்காழி – 65.80 மிமீ
கொள்ளிடம் – 46 மிமீ
தரங்கம்பாடி – 20.90 மிமீ
செம்பனார்கோவில் – 53 மிமீ


