in

பழனி கோவிலில் கந்த சஷ்டி விழா

பழனி கோவிலில் கந்த சஷ்டி விழா

 

பழனி கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை துவங்க உள்ளதை முன்னிட்டும், தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி, கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாளை புதன்கிழமை உச்சி கால பூஜைக்கு பின் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்க உள்ளது .

முக்கிய நிகழ்வான 27ஆம் தேதி மாலை சூரசம்கார நிகழ்ச்சிக்காக மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சி அன்று கிரிவீதியில் சூரசம்காரம் நடைபெறுகிறது.

அதற்கு அடுத்த நாளான 28ஆம் தேதி சண்முகருக்கும், வள்ளி ,தெய்வானைக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டும் தீபாவளி தொடர் விடுமுறையை ஒட்டி இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் அடிவாரம் கிரிவலப் பாதையில் குவிந்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும் பக்தர்கள் குடையைப் பிடித்தவாறு மலைக் கோவிலுக்கு படிப்பாதையிலும், ரோப் காரிலும், மின் இழுவை ரயில் வழியாகும் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நாளை கந்த சஷ்டி விழா துவங்க உள்ள நிலையில் விழாவிற்கான முன்னேற்பாடுகள் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் செய்து வருகின்றனர்.

What do you think?

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்று தயார் நிலை

மயிலாடுதுறை, சீர்காழி சுற்று வட்டாரப் பகுதிகளில் விடிய, விடிய கனமழை