in

பிரபல நடிகர் ஹரிஷ்கல்யாண் மற்றும் பிரபல நடிகை அதுல்யா ஆகியோர் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்….

பிரபல நடிகர் ஹரிஷ்கல்யாண் மற்றும் பிரபல நடிகை அதுல்யா ஆகியோர் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்….

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனுதினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகர் ஹரிஷ்கல்யாண் மற்றும் பிரபல நடிகை அதுல்யா உள்ளிட்டோர் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். நாளை டீசல் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அண்ணாமலையார் கோவிலில் சம்மந்த விநாயகர் சன்னதி அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து படக்குழுவினருக்கு அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவிலில் இருந்த பக்தர்கள் நடிகர் மற்றும் நடிகையுடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

What do you think?

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் விழுப்புரம் மாவட்ட சரக டிஐஜி ஆய்வு

செங்கம் அருகே இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை