சிதம்பரத்தில் திடீரென நள்ளிரவில் வட்டமிட்ட ட்ரோன்
சிதம்பரத்தில் திடீரென நள்ளிரவில் வட்டமிட்ட ட்ரோன் போன்ற மர்ம வெளிச்சம் பொதுமக்கள் அச்சம் சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ.
சிதம்பரம் அருகே பெருங்காலூர் கிராம பகுதியில் நள்ளிரவில் திடீரென வெளிச்சத்துடன் ஒரு ட்ரோன் சுற்றி சுற்றி வந்துள்ளது என்ன வெளிச்சம் என்று கிராம மக்கள் அச்சத்துடன் பார்த்த போது அந்த வெளிச்சம் பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் சுற்றி திரிந்துள்ளது.
மேலும் அதனை தொடர்ந்து கிராம மக்கள் அவர்களது செல்போனில் வீடியோ எடுத்த போது அந்த வெளிச்சமானது வெவ்வேறு பகுதிகளுக்கு சென்ற நிலையில் அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்தனர்.
சுமார் 10 நிமிடங்கள் வெளிச்சத்துடன் சுற்றித்திரிந்த அந்த ட்ரோன் காட்சி மெல்ல மெல்ல நகர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்றது கிராம மக்கள் கண்ணில் இருந்து வெகு தொலைவில் சென்றதால் இது போன்ற வெளிச்சம் எவ்வாறு வந்தது எனவும் சுப நிகழ்ச்சிக்காக எடுக்கப்படும் ட்ரோனா அல்லது வேறு ஏதாவது கிரகணத்தில் இருந்து வந்த மர்ம இயந்திரமா என மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


