ராஜபாளையம் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேக்கத்தால் மாணவர்கள் சிரமம்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அமைந்துள்ள சேத்தூர் சேவுகபாண்டிய அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி உள்ளது.
இதனால் பள்ளிக்கு வருவோர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். வளாகத்தில் நீர் வடிகால் வசதி சரிவர இல்லாததால், மழைநீர் வெளியேறாமல் தண்ணீர் மண்டி நிற்கிறது.

பள்ளி வளாகம் முழுவதும் களிமண் மற்றும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்கு இயற்கை உபாதை கழிப்பதற்கு செல்வது கடினமாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்கள், “மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகமும் பள்ளி நிர்வாகமும் இணைந்து உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.


