பாம்பன் சாலை பாலத்திலிருந்து கடலில் குதிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
பாம்பன் சாலை பாலத்திலிருந்து இளைஞர் ஒருவர் கடலில் குதிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் சாலை பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் பாம்பன் கடலில் குதிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதையடுத்து போலீசார் அந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இணைப்பதற்கு பாம்பன் சாலை பாலம் மற்றும் ரயில் பாலம் முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்திருந்த YouTuber ஒருவர் பிரகாஷ் வாரியர் என்ற இன்ஸ்டா ஐடியில் பாம்பன் ரயில் பாலத்தில் செல்லும்போது ரயிலில் இருந்து வீடியோ எடுத்துள்ளார்.
அப்போது பாம்பன் மையப்பகுதியில் அமைந்துள்ள செங்குத்து தூக்குபாலம் அருகே வீடியோ எடுத்துக் கொண்டே சென்றபோது பாம்பன் சாலை பாலத்திலிருந்து இளைஞர் ஒருவர் குதிப்பது வீடியோவில் பதிவாகி இருந்தது.
அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

கடலில் குதித்த இளைஞர் தற்கொலை செய்வதற்காக கடலில் குதித்தாரா? அல்லது ரீல்ஸ் செய்வதற்காக குதித்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சம்பவம் நடந்து பத்து நாட்கள் மேல் ஆகியும் இதுவரை இது குறித்து அப்பகுதி மீனவர்கள் தகவல் கிடைக்கவில்லை.
மேலும் கடலில் குதித்தவர் ஒருவேளை உயிரிழந்திருந்தால் அவருடைய உடல் இதுவரை கரை ஒதுக்கியதாகவோ அல்லது மீனவர்களால் அவர் உயிருடன் மீட்கப்டட்டதாக தகவல் கிடைக்காததால் இந்த வீடியோவின் உண்மைக்கு ஆராய்வதற்காக போலீசார் முடிவு செய்துள்ளனர்.


