சிதம்பரம் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச முயன்றதைக் கண்டித்து போராட்டம்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள கவாய் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், நீதித்துறையின் மாண்பை இழிவுபடுத்திய வழக்கறிஞரைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சிதம்பரம் வழக்கறிஞர்கள் சார்பில் சிதம்பரம் அருகே உள்ள சி. முட்லூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் சங்க துணைச் செயலாளர் பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது செருப்பு வீச முயன்று கைதான வழக்கறிஞரை நிரந்தரமாக பணி நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

