in

புது கரன்சி நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

புது கரன்சி நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

 

செஞ்சியில் பழமையான திருத்தலமான பீரங்கிமேடு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ரூபாய் 2 – லட்சத்து 25 ஆயிரம் புது கரன்சி நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்த அருள்மிகு அபிதகுஜாம்பாள் அம்மன்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கிமேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாத நவராத்திரி திருவிழாவில் விஜயதசமி திருநாளில் அருள்மிகு அபிதகுஜாம்பாள்
அம்மனுக்கு 2- லட்சத்து 25 ஆயிரம் புது கரன்சி நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை கட்டப்பட்டது.

விழாவை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், விபூதி போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் நடைபெற்றது.

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு விஜயதசமி திருநாளில் அருள்மிகு அபிதகுஜாம்பாள் அம்மனுக்கு 500,200,100, 50,20,10 ரூபாய் கொண்ட புது கரன்சி நோட்டுகளில் மொத்தம் 2 – லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் புது கரன்சி நோட்டுகளால் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மனுக்கு பஞ்சமுக தீப ஆராதனை காட்டப்பட்டது.

செஞ்சி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகித்தனர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

What do you think?

கருங்குளம் ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில் கருடசேவை புறப்பாடு

மகா சண்டிகா தேவி யாத்தில் திரளான பக்தர்கள் வழிபாடு