in

ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்ட பேரணி

ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்ட பேரணி

 

ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்ட பேரணி நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பது.

தஞ்சாவூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை தறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்.

ஒருங்கிணைந்து தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று தஞ்சை அரண்மனை வளாகம் வரை பொதுமக்களிடையே தாய்ப்பாலின் அவசியம் குறித்தும் மேலும் கீரை காய்கறிகள் உள்ளிட்ட சத்தான உணவு வகைகளை சமைத்து சாப்பிட வேண்டும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணிக்கு முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

What do you think?

காலதாமதமாக திறக்கப்படும் கால்நடை மருத்துவமனை

நாகை புத்தூர் பகுதியில் பேச தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி