திருக்கோவிலூரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி அண்ணா சிலைக்கு மரியாதை
திருக்கோவிலூரில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தி, உறுதிமொழி எடுத்த முன்னாள் அமைச்சர் பொன்முடி.
தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி திமுகவினர் அந்தந்த பகுதிகளில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்று உறுதிமொழி ஏற்று வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி தலைமையில் திருக்கோவிலூர் நகராட்சியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்று கூட்டாக உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருக்கோவில் நகர மன்ற தலைவர் முருகன், துணைத்தலைவர் உமாமகேஸ்வரி குணா, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


