சிதம்பரத்தில் பாச கயிறுடன் சாலைக்கு வந்த எமதர்மராஜா
சிதம்பரத்தில் திடீரென பாச கயிறுடன் சாலைக்கு வந்த எமதர்மராஜா, தலைக்கவசம் அணிவது குறித்து போலீசார் விழிப்புணர்வு
சிதம்பரம் நகரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் வந்து செல்லும் நிலையில் பெரும்பாலான பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் விபத்து ஏற்பட்டு மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
இதனை தடுக்கும் வகையில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் பொறுப்பு அம்பேத்கர் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எமதர்மராஜா வேடமடைந்த நபருடன் சாலைகளில் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது எமதர்மராஜா வேடமடைந்த நபர் பாசக்கயிறை வீசியவாறு வாகனங்களை தடுத்து நிறுத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர், கூடவே காவல்துறையினர் இருந்ததால் சற்று நிம்மதி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த பொது மக்களிடம் பேசிய காவல் ஆய்வாளர் மற்றும் எமதர்மராஜா தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார், குறிப்பாக தலைகாவசம் அணியாமல் செல்லும்போது விபத்து ஏற்பட்டால் உயிர் போகும் அபாயம் உள்ளதாகவும் அதே போன்று குடிபோதையில் எதிரியவரும் நபர்கள் மோதினாலும் நாம் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் நமது குடும்பத்தை காக்க வேண்டுமென்றால் தலைகாசம் அணிவது கட்டாயம் குறித்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


