in

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து சம்பவம் செய்திருக்கும்…. ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன்


Watch – YouTube Click

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து சம்பவம் செய்திருக்கும்…. ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன்

 

80, 90 கால கட்டங்களில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இணைந்து பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருகின்றனர் .

நினைத்தாலே இனிக்கும் என்ற படத்திற்குப் பிறகு ரசிகர்களின் விருபதிற்கு ஏற்ப இருவருக்கும் தனித்தனியாக படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தனர்.

இருவரும் உற்ற நண்பர்களாக இருந்தும் மறுபடியும் இணைந்து எந்த படத்திலும் நடிக்க வில்லை. துபாயில் நடந்த விருது வழங்கும் விழாவில் ரஜினி உடன் இணைந்து நடிப்பதாக கமலஹாசன் செய்தியை வெளிப்படுத்தினார்.

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சதீஷ்.. இருவரும் இணைந்து தரமான சம்பவம் செய்யபோவதாக கேள்விப்பட்டேன் அது உண்மையா? என்று கேட்க “இது ஒரு தரமான சம்பவமா??? என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் பார்வையாளர்களுக்கு அது பிடித்தால் நல்லது.

அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால், நாங்கள் அதை விரும்புவோம். இல்லையெனில், நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம். இது நீண்ட காலமாக நடக்க விருந்தது. தரமான சம்பவமா என்பதை படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் தரம் எப்படி இருக்கிறது என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். ….. படம் வருவதற்கு முன்பே தரமானது என்று சொல்லக்கூடாது.

நாங்கள் இருவரும் இணைந்து பல நாட்கள் ஆகிவிட்டது ஒரு பிஸ்கட்டை பாதி பாதியாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள் ஆளுக்கு ஒரு பிஸ்கட்டை சாப்பிட நினைத்தோம்… அதனால் தனித்தனியாக படம் செய்து வந்தோம் இப்போஅரைபிஸ்கட் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.

சோ வீ வில் கம் டு கெதர் என்று கூறினார் . எப்பொழுதுமே எங்களுக்குள் போட்டி இல்லை அந்த போட்டியை நினைத்தவர்கள்/உருவாக்கியவர்கள் ரசிகர்களாகிய நீங்கள்.

வணிக ரீதியாக இது ஆச்சரியமாக இருக்கலாம், எங்கள் உழைப்பிற்கு நாங்களே முன் உதாரணம் …எங்களுக்குள் இது எப்போதோ நடக்க வேண்டியது அதற்கான சந்தர்ப்பம். இப்போதுதான் உருவாகி இருக்கிறது என்று ரசிகர்களின் பலத்த கைத்தட்டல்களின் இசையுடன் உரையை முடித்தார்.

What do you think?

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு

இளம் ராமானுஜரை கண்டறியும் கணிதப் போட்டி