in

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை

 

விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது

திருவிளக்கு பூஜையில் 108 பெண்கள் கலந்து கொண்டு மனம் உருகி சாமி தரிசனம்..

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.

ஆவணி மாத பௌர்ணமி தினமான நேற்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு பால் பன்னீர் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பல வண்ண மலர்கள் கொண்டு அர்ச்சனை, அலங்காரம் செய்த பின் சர்க்கரைப் பொங்கல் பல்வேறு வகையான பழங்கள் சுண்டல் உள்ளிட்டவை நெய்வேதியம் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட நெடு வரிசையில் நின்று அதிகாலை முதலே அங்காளம்மனை தரிசனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜைக்கு என்று பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்திற்கு ஸ்ரீதுர்க்கை அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்த உற்சவர் அங்காளம்மன் கொண்டுவரப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்து அங்காளம்மனை வழிபட்டனர்.

அனைவரின் நலம் காக்க வேண்டி பெண்கள் மற்றும் பக்தர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ஆவணி மாத பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் இதில் கோவில் உதவி ஆணையர் சக்திவேல் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சேட்டு (எ)ஏழுமலை மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

ரூ.16 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்க பந்தகால் நடும் பணி

கிரகணம் முடிந்து ஏழுமலையான் கோவில் நடை மீண்டும் திறப்பு