in

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி வைத்தார்

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி வைத்தார்

 

சிதம்பரம் அருகே தானூர் கிராமத்தில் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம் கட்டும் பணி. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரத்தை அடுத்த தானூர் கிராமத்தில் புதிய 110 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தானூர் கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, மின்சார வாரிய தலைமை பொறியாளர்கள் சதாசிவம், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பங்கேற்று துணை மின் நிலையம் கட்டுவதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

பின்னர் மின் கம்பம் புதைக்கப்படும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் சுமார் 24 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் இந்த புதிய துணை மின் நிலையம் அமைய உள்ளது எனவும், இந்த துணை மின் நிலையம் அமைந்தால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 12 ஆயிரம் பொதுமக்கள் பயன் பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

What do you think?

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் 2025 ஆண்டு திருவிழா கொடியேற்றம்

ஆந்திர பறவைகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைத்த 3000 அரிய வகை மரக்கன்று