மயிலாடுதுறை மாவட்டத்தில் போலீசார் தீவிர குட்கா ரெய்டு
மயிலாடுதுறை மாவட்டத்தில் போலீசார் தீவிர குட்கா ரெய்டு:- ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 240 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டதை தொடர்ந்து, டிஎஸ்பி பாலாஜி மேற்பார்வையில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில்,மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் 120 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த வெங்கட்ராமன், ராஜஸ்தானை சேர்ந்த பேத்துசிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோன்று, பெரம்பூர் காவல் சரகத்துக்குட்பட்ட கப்பூரை சேர்ந்த பாலமுரளி என்பவர் பதுக்கி வைத்திருந்த 120 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர் தொடர்ந்து மூவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர்.
குட்கா விற்பனை தொடர்பான புகார்களை இலவச உதவி எண் 10581 அல்லது அலைபேசி எண் 96261-69492 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


