ஸ்ரீ சனீஸ்வரனுக்கு அபிஷேக ஆராதனை
நாமக்கல் அருகே ஆவணி முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு செம்மலையில் உள்ள ஸ்ரீ சனீஸ்வரனுக்கு அபிஷேக ஆராதனைகள்.
நாமக்கல் அருகே உள்ள இராசாம்பாளையம் கிராமம் அறியாத ஊற்று செம்மலையில் உள்ள ஸ்ரீ சனீஸ்வரன் சிறப்பு வழிபாட்டு ஸ்தலத்தில் வைகாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீ சனீஸ்வரனுக்கு தைலகாப்பு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் விபூதி கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சனி பகவனுக்கு 108 நாமவளி வண்ண நறுமலர்கள் கொண்டு அர்ச்சனையும் பின்னர் மஹா தீபம் காண்பிக்கப்பட்டன.
பின்னர் இங்குள்ள ராகு கேதுவிற்று சிறப்பு அபிஷேகம் ஆராதனை மஹா தீபம் காண்பிக்கப்பட்டன.

பின்னர் உற்றவர் சின்ன பள்ளாக்கில் கோவிலை சுற்றி வந்து பக்தகளுக்கு காட்சி அளித்தார் இந்த சனீஸ்வரன் சிறப்பு வழிபாட்டு ஸ்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை அன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகின்றன.
வருகை புரிந்த அனைவருக்கும் அன்னதானம் கோவில் சார்பாக வழங்கப்பட்டது


