in

அன்புமணி விளக்கமளிக்க வேண்டுமென ராம்தாஸ் வலியுறுத்தல்

அன்புமணி விளக்கமளிக்க வேண்டுமென ராம்தாஸ் வலியுறுத்தல்

 

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுமூலமாக அன்புமணி மீது குற்றஞ்சாட்டப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு 31 ஆம் தேதிக்குள் நேரிலையோ அல்லது தபால் மூலமாக அன்புமணி விளக்கமளிக்க வேண்டுமென ராம்தாஸ் வலியுறுத்தி உள்ளார்.

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

ஒழுங்கு நடவடிக்கை குழுவில் உள்ள நிர்வாகிகளான பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மக, ஸ்டாலின், துரை, சதாசிவம், நெடுஞ்கீரன், பானுமதி சத்தியமூர்த்தி, திருமலை குமாரசாமி, பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாமகவில் 9 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டமாக இது நடத்தப்பட்டதில் இரண்டரை மணி நேரம் அன்புமணி மீது குற்றஞ்சாட்டபட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

அன்புமணி மீது 16 குற்றஞ்சாட்டுகளுக்கும் விளக்கம் அளிக்க வேண்டுமென ஒழுங்கு நடவடிக்கை குழுவில் முடிவு எடுக்கப்பட்டு குற்றஞ்ச்சாட்டுகளுக்கு 31.08.2025 தேதிக்குள் பதலளிக்க வேண்டுமென நோட்டீசாக அன்புமணிக்கு அனுப்பட்டுள்ளது.

விளக்கத்தினை அன்புமணி நேரிலையே அல்லது தபால் மூலமாகவோ விளக்கம் அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

தாராபுரத்தில் அரக்க முக முக முடிய அணிந்து நூதன கண்டன ஆர்ப்பாட்டம்..

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்