சிவகங்கை ஸ்ரீ ஆதிசங்கரர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ ரத்ன கர்ப மகா கணபதி சுவாமி மற்றும் ஸ்ரீ சாரதாம்பாள் ஸ்ரீ ஆதிசங்கரர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு மகா சங்கல்பம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் கோகுலால் தெருவில் அமைந்துள்ள மிகப் பழமையான ஸ்ரீ ரத்ன கர்ப கணபதி சுவாமி மற்றும் ஸ்ரீ சாரதாம்பாள் ஸ்ரீ ஆதிசங்கர சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு இன்று மகா சங்கல்பம் விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது.
இத்திருக்கோவில் 1958 ஆம் ஆண்டு மைசூர் சிற்ப சித்தாந்தி ஶ்ரீ சித்தலிங்க சுவாமிகளால் ஸ்ரீ அபூர்வ கணபதி விக்கிரம் செய்து கும்பாபிஷேக விழா நடந்தது.
இதன்பிறகு 67 வருடங்களுக்குப் பின்னர் இத்திருகோவில் புனரமைப்பு திருப்பணிகள் நிறைவு செய்து வருகிற 20 ஆம் தேதி புதன்கிழமை அன்று கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
இவ்விழாவின் தொடக்கமாக இன்று கணபதி பூஜை கோபூஜை மகா சங்கல்பம் வேத பாராயணம் வாஸ்து மண்டல பூஜை, வாஸ்து ஹோமம் சர்வ தோபத்ர மண்டல பூஜை நடைபெற்றது தொடர்ந்து கணபதி பெருமாளுக்கும் ஸ்ரீ ஆதிசங்கரருக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்து மந்திரங்கள் கூறி பூஜைகள் நடந்தன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கணபதி பெருமாள் மற்றும் ஆதிசங்கரர் சுவாமியை வழிபாடு செய்தனர் விழா ஏற்பாடுகளை ராமசாமி மேலாளர் குரு சேவா நிரட்டா முரளி ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம் அட்மினிஸ்ட்டர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


