in

மூப்பனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மூப்பனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 

கும்பகோணத்தில் மறைந்த ஜி கே மூப்பனாரின், 94 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மூப்பனார் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

கும்பகோணத்தில் தமிழக சட்டபேரவை காங்கிரஸ் தலைவராக ஒருமுறையும், நான்கு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இரு முறை தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக எட்டாண்டுகளும் பணியாற்றிய இவர் கருத்து வேறுபாடால் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பணியாற்றியவர் ஜி கே மூப்பனார்.

இந்நிலையில் ஜி கே மூப்பனாரின், 94 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள மாவட்டத் தலைவர் பி எஸ் சங்கர், தலைமையில் மூப்பனார் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மிதுன் மூப்பனார், மாநில அரசியல் ஆலோசனை உயர்மட்ட குழு உறுப்பினர் ராஜாங்கம், மாவட்ட துணை தலைவர் சிவா, மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் செல்வம், ஊடகப்பிரிவு மாவட்ட பொறுப்பாளர் ஸ்ரீராம், விவசாய அணி மாவட்ட தலைவர் முருகானந்தம், திருநாகேஸ்வரம் பேரூர் தலைவர் செந்தில்குமார், மாணவரணி மாவட்ட தலைவர் சுதர்சன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

What do you think?

ஸ்ரீ சக்தி ரதத்தில் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் வருகை நிகழ்வு

உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை வழிபாடு