in

பாதுகாப்பு படை வீரர் தாக்கியதாக புகார் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு

பாதுகாப்பு படை வீரர் தாக்கியதாக புகார் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு

 

சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் இயற்கை உபாதைக்காக சென்ற கிராமவாசியை என்.எல்.சி. பாதுகாப்பு படை வீரர் தாக்கியதாக புகார். கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு. சி.ஐ.எஸ்.எப் வீரர் மீது வழக்கு பதிந்து கைது செய்ய கோரிக்கை. மதுபோதையில் இருந்தாரா என போலீசார் விசாரணை

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (50). இவர் இன்று இயற்கை உபாதைக்காக வளையமாதேவி கிராம வயல் பகுதி ஓரம் சென்றதாக கூறப்படுகிறது.

அது என்எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமான பகுதி என்பதால் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஐஎஸ்எப் வீரரான கேரளாவைச் சேர்ந்த ஜிதேவாஸ், கிராமவாசியான சீனிவாசனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் கீழே விழுந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் உடனடியாக சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வழங்கியது தகவல் அறிந்த சேத்தியாதோப்பு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இயற்கை உபாதைக்காக சென்றவரை சிஐஎஸ்எப் வீரர் எப்படி தாக்கலாம் எனக்கூறி கிராம மக்கள் ஆவேசமாக குரல் எழுப்பினர். கிராமவாசியை தாக்கிய பாதுகாப்பு படை வீரரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர் மது போதையில் இருந்ததாக கிராம மக்கள் சிலர் குற்றம் சாட்டினர். இதையடுத்து போலீசார் பாதுகாப்பு படை வீரரிடம் கருவி மூலம் சோதனை செய்தனர். பின்னர் பாதுகாப்பு படை வீரரை போலீசார் போலீஸ் ஜீப்பில் ஏற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து அங்கிருந்த கிராம மக்களிடம் போலீசார், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து காயமடைந்த கிராமவாசி சீனிவாசன் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்..

பின்னர் கிராம மக்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

பூலோக நாதர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம்

தூய்மை பணியாளர்கள் சமைக்கும் போராட்டம்