மின்விளக்குகள் இல்லாததால் இருண்டு கிடக்கும் கொள்ளிடம் பாலம்
சீர்காழி அருகே கொள்ளிடம் பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருண்டு கிடக்கும் நிலை. அச்சத்துடன் வாகன ஓட்டிகள் பாலத்தைக் கடக்கும் அவலம். உடனடியாக மின் விளக்குகள் அமைத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை.
சீர்காழி அருகே கொள்ளிடத்தில் மயிலாடுதுறை மாவட்டம் கடலூர் மாவட்டம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் சுமார் 1952இல் கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியே பிரதான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
70 ஆண்டுகளுக்கு மேல் பிரதான பாலம் முறையாக பராமரிக்கப்படாமல் பாலத்தில் ஆங்காங்கே சாலைகள் பள்ளமாக உள்ளது. பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள பாலத்தை பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்கின்றன பாலம் இருட்டாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் பாலத்தின் பக்கவாட்டு தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.

ஆகையால் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு உள்ள மின் விளக்குகளை எரிய வைத்தும், கூடுதலாக அதிக ஒளி தரக்கூடிய மின்விளக்குகளை அமைத்து பொதுமக்கள் வாகன ஓட்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


