மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலமாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம்
தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்து திண்டுக்கல் மாநகர் காங்கிரஸ் கட்சி சார்பாக 100க்கும் மேற்பட்டோர் மெழுகுவத்தி ஏந்தி ஒரு கிலோ மீட்டர் தொலைவு ஊர்வலமாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேர்தல் ஆணையம் முறைகேடாக வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாகவும், ஒரே வாக்காளர்கள் பலமுறை வாக்களிக்க வாய்ப்பு கொடுத்ததாகவும் தேர்தல் ஆணையம் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறது என்றும், தேர்தல் ஆணையமானது முறையாக தேர்தல் நடத்தாமல் தேர்தலில் பல குளறுபடிகளை ஏற்படுத்தி வருவதை கண்டித்தும் வருங்காலங்களில் தேர்தலை முறையாக ஜனநாயகப்படி நடத்திட வேண்டும் என்று கூறி இன்று திண்டுக்கல் காங்கிரஸ் மாநகர கமிட்டி சார்பாக துரை மணிகண்டன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் திண்டுக்கல் காமராஜர் சிலை முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி மத்தியில் ஆளும் பாஜக அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு குமரன் பூங்கா வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாநகர காங்கிரசார், இளைஞர் காங்கிரசார், மாணவர் காங்கிரசார், மகிளா காங்கிரசார், சிறுபான்மை பிரிவு, எஸ் எடி பிரிவு, பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


