மாங்காட்டில் நியாய விலை கடை விளையாட்டு மைதானம் பூங்கா திறக்கும் நிகழ்வு
மாங்காட்டில் நியாய விலை கடை விளையாட்டு மைதானம் பூங்கா திறக்கும் நிகழ்வு அமைச்சர் கலந்து கொண்டு மக்களின் பயன்பாட்டிற்கு திறப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடை விளையாட்டு மைதானம் பூங்கா திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தாமு அன்பரசன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வ பெருந்தகை உள்ளிட்டோர் கலந்துகொண்டு நியாய விலை கடைகளையும் விளையாட்டு மைதானம் பூங்கா உள்ளிட்டவைகளை திறந்து வைத்து சிறப்பித்தனர்.

இதில் மாங்காடு நகர மன்ற தலைவர் சுமதி முருகன் கலந்து கொண்டனர் அவருடன் அவர் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..


