நடிக்கும் போது கேவலமா பார்த்தார்கள்
சார்பட்டா படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் துஷாரா விஜயன்.
இவர் தமிழில் “போதை ஏறி புத்தி மாறி” என்ற படத்தின் முலம் அறிமுகமானார்.
சார்பட்டா படம் அவருக்கு திருப்புமுனையாக இருந்து அந்த படத்திற்கு பிறகு இவரை ரசிகர்கள் மாரியம்மா என்று அன்புடன் அழைத்தனர் .
வீரன் தீரன் சூரன், வேட்டையன், ராயன் போன்ற வெற்றிபடங்களிலும் நடித்தவர் …அண்மையில் தனது திரை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் ….
நான் எப்போதுமே தோல்விகளையும் நிராகரிப்புகளையும் கண்டு அழுவதில்லை ஏனெனில் எல்லோரின் வாழ்க்கையிலும் தோல்வி வந்து போகும் நான் நடிகையாக போகின்றேன் என்று கூறிய பொது என் குடும்பத்தினர் நம்பவில்லை இன்னும் சொல்லப்போனால் எல்லோரும் விமர்சித்தார்கள்.
இந்த பொண்ணா நடிக்க போகுது என்று என்னை கேவலமாக சித்தரித்தார்கள் ஆனால் அவர்களே என் படங்களை பார்த்து செமையா நடிக்கிறமா என்று பிறகு பாராட்டினார்கள்….. இதுதான் எனக்கு பூஸ்ட் அதனால் சான்ஸ் கிடைக்கவில்லை என்று வருத்த படமாட்டேன்.


