in

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர் சந்திப்பு

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர் சந்திப்பு

 

வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தும்:- விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்…

விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் வருகின்ற 17ஆம் தேதி நடைபெற உள்ள பாமகவின் சிறப்பு பொதுக் குழு கூட்டம் வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழுவாகவும்., யாரும் நடத்தாத வகையில் நடைபெற உள்ளதாகவும், சென்னை திருமங்கலம் அண்ணா நகர் பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் நடந்த கொண்ட செய்தியை கேட்டு துடித்து போனதாகவும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

சிறார்கள் இளைஞர்கள் சமூக வலைதளங்களை உயர்விற்காக பயன்படுத்த வேண்டுமெனவும், வேறு எது எதையோ படங்களை பார்ப்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும்., கைப்பேசியை கல்வி வளர்ச்சிக்காக எப்படி பயன்படுத்த வேண்டுமென கற்று தர வேண்டும், செல்பேசி அவசியமான ஒன்று தான் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து பயன்படுத்த வேண்டும், செல்பேசியில் ஒருவரை ஒருவரை கேவலபடுத்தி பதிவிடுவதை கட்சியினர் இளைஞர் விட்டு விட வேண்டும் முன்னேற்ற பாதை ஒன்று இருக்கிறது என தெரிவித்தார்.

அம்பேத்கர் குறித்த 17 தொகுதிகளை உள்ளடக்கிய நூலிமை வெளியிட்ட அமைச்சர் சாமிநாதனை பாராட்டுவதாகவும்., இதுபோன்று தமிழக அரசு தொடர்ந்து வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இலங்கை அரசு கைது செய்த 49 மீனவர்களையும் விசைப்படகுகளை மீட்க வேண்டும் இது தொடர்கதையாக இருந்து வருவதால் கட்ச தீவினை மீட்க வேண்டும். அரசியல் காரணத்திற்காக தாரை வார்க்கப்பட்டதை மீட்டதால் தான் தீர்வு காணப்படும், வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை துவங்கி திருச்சி ஆண்டிப்பட்டி புறவழிச்சாலையை தனியார் சுங்க கட்டணத்திற்கு விட கூடாது. ஆறு ஏரி நீர் நிலைகளில் ஜேசிபி மூலம் மணல் எடுப்பதை நிறுத்தாவிட்டால் நீர் நிலைகள் காணாமல் போய்விடும் இதற்கு முடிவு கட்ட அரசு தயாராக இல்லை என குற்றஞ்சாட்டினார்.

அகழாய்வில் தமிழ்நாடு எப்பொழுதுமே முன்மாதிரி மாநிலம் தான் கீழடி, கொற்கை, சிவகளை , ஆதிச்சநல்லூர், கங்கை கொண்ட சோழபுரம் வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
துப்புரவு பணியாளர்கள் உரிமைக்காக போராடியவர்களை கைது செய்யப்பட்டவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும், சமூக வலைதளங்களில் தன்னை பற்றி கேவலமாக பேசுபவர்கள் சொல்லிட்டு போகட்டும் கெளரவ தலைவரை ஒருகும்பல் திட்டமிட்டு அவதூறாக பதிவிடுகிறார்கள் அப்படி பதிவிடுபவர்களுக்கு பணம் கொடுத்து போட சொல்லுவதாக செய்திகள் வருவதாகவும் தூற்றூவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் ஏற்றதோர் கருத்தை உள்ளம் ஏற்றால் எதற்கும் அஞ்சேன், தன்னை பற்றி அவதூறாக பேச பணம் கொடுக்கிறார்கள் என்றால் நாம் எங்கே செல்கிறோம் என்று தோன்றுகிறது. இதனால் பயணத்தை நிறுத்த போவதில்லை மக்களுக்காக போராட வேண்டியது நிறைய உள்ளது என கூறினார்.

பாமகவின் சிறப்பு பொதுக் குழு கூட்டம் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றும்., நாடு நல்லா இருக்கனும் நல்ல அரசு அமையனும் போதை பொருட்கள் ஒழியனும் கஞ்சா இல்லாத தமிழகம் இருக்கனும் என்பது தான் எனது சுதந்திர தின வாழ்த்துக்களாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது கௌரவத் தலைவர் ஜி.கே மணி, விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளியிட்ட பலர் உடனிருந்தனர்.

What do you think?

கொல்லப்போகிறார்கள் கதறி அழுத சதா

கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள்