புதுச்சேரி U.T.-யில் உள்ள பொது மக்களுக்கும், அனைத்து போக்குவரத்து மற்றும் வணிகப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் 01.11.2025 முதல் டெல்லிக்குள் நுழைய கட்டாயமான தடை விதிக்கப்படுகிறது… புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு
தேசிய தலைநகர் பகுதி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் காற்றின் தர மேலாண்மை ஆணையச் சட்டம் 2021 இன் பிரிவு 3 இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய தலைநகர் பகுதி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் காற்றின் தரத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் காற்று தர மேலாண்மை ஆணையத்தை (CAQM) அமைத்துள்ளது என்பதை தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, நவம்பர் 1, 2025 முதல், இலகுரக, நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் (BS-VI டீசல், CNG, LNG அல்லது மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் டெல்லி நகரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை தவிர) மற்றும் அனைத்து வணிகப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும், டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்படும் என்று ஆணையம் அறிவித்துள்ளது.
ஆணையத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களின்படி, புதுச்சேரி U.T.-யில் உள்ள பொது மக்களுக்கும், அனைத்து போக்குவரத்து மற்றும் வணிகப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் 01.11.2025 முதல் டெல்லிக்குள் நுழைய கட்டாயமான தடை விதிக்கப்படுகிறது. இத்தடையானது இளகுரக சரக்கு வாகனங்கள் (LGV), நடுத்தர சரக்கு வாகனங்கள் (MGV) மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் (HGV) கணுக்கு பொருந்தும். இத்தடையானது BS-VI, CNG, LNG மற்றும் EVகளுக்கு பொருந்தாது


