in

வினாடி வினா தனிநபர் உலக சாதனை நிகழ்ச்சி

வினாடி வினா தனிநபர் உலக சாதனை நிகழ்ச்சி

 

புதுச்சேரியில் நடைபெற்ற வினாடி வினா தனிநபர் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியை மாணவ மாணவிகள் நேரலையில் எழுப்பிய 250 கேள்விகளுக்கு 8 மணி நேரம் இடைவிடாமல் பதில் அளித்து ஈச் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

புதுச்சேரியில் 26-வது உலக இளையோர் தினத்தை முன்னிட்டு இளைஞர்களின் நல்வாழ்வுக்காகவும் நாட்டினுடைய ஒருமைப்பாட்டிற்காகவும் சுற்றுப்புற சூழல் மத நல்லிணக்கம் ஆகியவற்றிற்காக குழந்தைகளின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற வகையில் நடைபெற்ற தனிநபர் உலக சாதனை நிகழ்வு புதுச்சேரி மூலக்குளம் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

8 மணி நேர வினாடி வினா உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேராசிரியர் வினிதா ரமேஷ் நேரலையில் மாணவ மாணவிகள் எழுப்பிய 250 கேள்விகளுக்கு 8 மணி நேரம் இடைவிடாமல் பதில் அளித்து ஈச் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.

ஈச் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற பேராசிரியர் வினிதா ரமேஷிற்கு ஈச் உலக சாதனை அமைப்பின் நிறுவனர் டாக்டர் தமிழ்வாணன் கலந்துகொண்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

இந்த சாதனை நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

புனித நீராடி சாமி தரிசனம் செய்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

தேசிய பாதுகாப்பு படையுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது