எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து விலகும்…. மருமகள்?
எதிர்நீச்சல் 2 சீரியலில் ஈஸ்வரி ஆக நடிக்கும் கனிகா சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
குணசேகரன் தாக்கியதால் ஆபத்தான நிலையில் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக சீரியலில் காட்டப்படுகிறது.
சீரியலை விட்டு விலகுவதால் இப்படி ஒரு ட்விஸ்ட் … (ட்விஸ்ட் வைக்கலாம் டைரக்டர் சார் அதுக்காக இப்படியா சீரியலில் பெண்களை கொடுமைபடுத்துவிங்க…
இல்லத்தரசிகள் கதறல் உங்கள் காதில் விழவில்லையா) ஈஸ்வரி கதாபாத்திரம் முடிக்க படலாம் அல்லது அவருக்கு பதில் வேறு யாராவது நடிப்பார்களா என்று தெரியவில்லை.
இதற்கான பதிலை கூறாத நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாய் சென்றிருப்பதாக பதிவிட்டுள்ளார்.
விலகியதற்கான காரணத்தை இன்னும் வெளியிடவில்லை.. அவருக்கே இந்த கதாபாத்திரத்தின் மேல் வெறுப்பு வந்து வெளியேறிவிட்டாரா? தெரியவில்லை.

