இளம் பயிர் மழை நீரில் மூழ்கி சேதம்
நாற்று நட்டு முப்பது நாட்களான இளம் பயிர் மழை நீரில் மூழ்கி சேதம். ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதை போல் நேற்று மாலை முதல் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 809 மில்லி மீட்டர் அளவிற்கு சராசரியாக மழை அளவு பதிவாகி உள்ளது. இந்த தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த குண்டக்குடி பகுதியில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு 30 நாட்களே ஆன இளம் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

தொடர்ந்து தண்ணீரில் பயிர்கள் மிதப்பதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஏக்கருக்கு 30,000 வரை செலவு செய்து பயிர்கள் பால் பிடிக்கும் தருவாயில் அழகு தொடங்கி விட்டதால் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கூறுகின்றனர்.


