சீர்காழி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்த இளைஞர்
சீர்காழி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியத் தெருவை சேர்ந்தவர் வேலுசாமி மகன் அசோக் இளவரசன் 33.
பொறியியல் பட்டதாரியான இவர் ஏ.எஸ். ஏஜென்சி என்ற பெயரில் வாட்டர் சப்ளை செய்துள்ளார்.
மேலும் இவர் டிரேடு மார்க்கெட்டிங் செய்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த அசோக் இளவரசன் இரவு சீர்காழி- வைத்தீஸ்வரன் கோவில் ரயில்வே ஸ்டேஷன் இடையே உள்ள உப்பனாறு ரயில்வே பிரிட்ஜ் அருகே ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் விரைந்து வந்து அசோக் இளவரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட அசோக் இளவரசனுக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


