in

எதிர்க்கட்சித் தலைவரை கண்டித்து மக்கள் சாலை மறியல்

எதிர்க்கட்சித் தலைவரை கண்டித்து மக்கள் சாலை மறியல்

 

எதிர்க்கட்சித் தலைவரை கண்டித்து மக்கள் சாலை மறியல்..
ரயில் ரயில் பாதையை மறித்து போராட முயன்றதால் பரபரப்பு ..
சைரன் எழுப்பி பொதுமக்களை எச்சரித்த ரயில்வே ஊழியர்கள் ..

வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாண்டியன் நகரில் கடந்த 4 ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு மக்கள் பல மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவாவை கண்டித்து மக்கள் வில்லியனூர்-திருக்கனூர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டம் ரயில்வே தண்டவாளம் அருகே நடந்ததால் எதிரே வந்த வாகனங்கள் ரயில்வே பாதையில் நின்றன. அதே நேரத்தில் ரயில் வருவதற்கான சிக்னல் கொடுக்கப்பட்டது. இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே ரயில்வே ஊழியர்கள் சைரனை எழுப்பி ரயில்வே தடுப்பணை இறக்கினார்கள். இதனைத் தொடர்ந்து ரயில்வே பாதையில் இருந்த வாகன ஓட்டிகள் அங்கிருந்து நகர்ந்தனர் இதன் பிறகு ரயில்வே கேட் போடப்பட்ட ரயில் கடந்து சென்றது.

விழுப்புரம் பாண்டியன் நகர் மக்கள் காலை 10 மணி வரை தங்களது போராட்டத்தை தொடந்தனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சட்டமன்ற உறுப்பினர் சிவாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பொதுமக்களுடன் பேச வைத்தனர்.

தற்காலிகமாக மணல் போட்டு சாலை சீரமைக்கப்படும்.. சில மாதங்களுக்குள் சாலை அமைக்கப்படும் என எம்எல்ஏ உறுதி அளிக்க போராட்ட கைவிடப்பட்டது…

What do you think?

ஆலை இயங்குவதை தடுத்து நிறுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

புதுச்சேரி பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்