in

6 கோவில்களில் இருந்து சிவப்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சிவப்பெருமான்

6 கோவில்களில் இருந்து சிவப்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சிவப்பெருமான்

 

தஞ்சையில் உள்ள 6 கோவில்களில் இருந்து சிவப்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோலாட்டம், தீ பந்தம் சிலம்பம், வானவேடிக்கை. கயிலாய வாத்யங்கள் இசையுடன் ராஜ வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.

தஞ்சையில் உள்ள அருள்மிகு. சீதாநந்தீஸ்வரர் திருக்கோவில், அருள்மிகு. நாக நாகேஸ்வரர் திருக்கோவில், அருள்மிகு கேசவதீஸ்வரர் திருக்கோவில், அருள்மிகு நீலகண்டர் மடம், அருள்மிகு. பஞ்சநதீஸ்வரர் பாவா மடம் உள்ளிட்ட 6 திருக்கோவில்களில் இருந்து சிவப்பெருமான் கரந்தை வடவாற்றில் ஒரு சேர எழுந்தருளினர்.

அங்கு தீர்த்தவாரி நடைப்பெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் சிவப்பெருமான் தனி தனி சப்பரத்தில் எழுந்தருளி கொடி மரத்து மூலை மாரியம்மன் கோவில் வந்தனர்.

தருமை ஆதினம் கட்டளை தம்பிரான் சுவாமிகள் ரிஷப வாகன காட்சி பெருவிழா வீதி உலாவை துவக்கி வைத்தார்.

சிறுமிகளின் கோலாட்டம், தீபந்தம் சிலம்பம், வான வேடிக்கை, கயிலாய வாத்யங்கள் இசையுடன் தஞ்சை ராஜ வீதிகளில் வலம் வந்த ரிஷப வாகன காட்சியை ஏராளமான பக்தர்கள் சாலையின் இரு புறமும் திரண்டு நின்று வழிப்பட்டனர்.

What do you think?

ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லனாக நடித்த நடிகர் சுமன் பேட்டி

புன்னைநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் முத்து பல்லக்கு பெருவிழா முத்துமணிச் சிவிகை