in

தஞ்சை பெரிய கோயிலில் ஆடி மாத பெளர்ணமி கிரிவலம்

தஞ்சை பெரிய கோயிலில் ஆடி மாத பெளர்ணமி கிரிவலம்

 

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆடி மாத பெளர்ணமி கிரிவலம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்கிற முடிக்கத்துடன் கிரிவலம் சென்றனர்.

கிரிவல நடைபாதையில் வயதானவர்களும், சர்க்கரை நோயாளிகளும் நடந்து செல்ல வசதியாக சாலை வசதியை மேம்படுத்திடவும் பக்தர்கள் கோரிக்கை.

உலகப் பிரசித்திப் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாதந்தோறும் பெளர்ணமி அன்று கிரிவலம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று மாநிலம் முழுவதிலுமிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் மாலை 6 மணி முதல் ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் என்கிற பக்தகோஷத்துடன் பெரிய கோயிலை சுற்றி கிரிவலம் சென்றனர்.

தற்போது கிரிவலம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை மாதாமாதம் அதிகரித்து வருகிறது. வயதானவர்களும் கிரிவலத்தில் பங்கேற்க சாலை வசதியை மேம்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

What do you think?

மழை காரணமாக, வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து

பாபநாசம் அருகே மதகரம் ஸ்ரீ மகா காமாட்சியம்மன் ஆலய பால்குட திருவிழா