மீண்டும் விஸ்வருபம் எடுக்கும் ரேவதி வழக்கு …. மனித உரிமைகள் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்
கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி புஷ்பா 2 படத்தின் PREMIER ஷோ..விற்கு .நடிகர் அல்லு அர்ஜுன் திடீரென ஹைதராபாத்தின் சிக்கட்பள்ளியில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு அறிவிப்பு இன்றி வந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுபடுத்த காவல்துறையினரால் தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தில் ரேவதிஎன்ற பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார் அவரது மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு இன்றுவரை சிகிச்சையில் இருக்கிறார்.
சம்பவத்தின் காரணமாக அல்லு கைதி செய்யப்பட்டு ஒரு நாளுக்கு பிறகு ரிலீஸ் செய்யப்பட்டார். இறந்த குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் 1 கோடியும் இயக்குனர் சுகுமார் மற்றும் மைத்ரி movies சார்பாக தலா 50 லட்சம் கொடுக்கபட்டது. இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC), அனுமதி இல்லாத நிலையில், அல்லு அர்ஜுனை ஏன், தியேட்டர் நிர்வாகமும் காவல்துறையும் வர அனுமதித்தது. சட்டத்தை மீறியதற்காக, நடிகர் மற்றும் நிர்வாகத்திற்கு எதிராக காவல்துறை சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்? .அதிக கூட்டம் கூடும்என்று தெளிவாகத் தெரிந்தபோதும் பாதுகாப்பை உறுதி செய்வதில் அலட்சியம் காட்டியது ஏன்? ” என்று NHRC கேள்வி எழுப்பியது..
மேலும் இறந்த ரேவதியின் நெருங்கிய உறவினருக்கு ₹5 லட்சம் கொடுக்க பட்டது ஏன்? என்று தெலுங்கானா தலைமைச் செயலாளர் கே. ராமகிருஷ்ணா ராவுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) ஆறு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க புதன்கிழமை ஷோ காஸ் நோட்டீஸ்(show cause notice) அனுப்பியது


