தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று 13,20,1வது வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் போல்பேட்டை பகுதியில் உள்ள தங்கம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
முகாமை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது 43 வகையான மனுக்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் மகளிர் உரிமைத்தொகை மாற்றுத் திறனாளிகள் தொழில் முனைவோர் மருத்துவ முகாம் இதில் மாநகராட்சி 13 அதிகாரிகள் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆகவே இது பொதுமக்களுக்காகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னாடி முதலமைச்சர் உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கை அனைத்து செய்து வருகின்றோம்.
மேலும் கடந்த 2023 ஆண்டில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ளது இதையடுத்து 2024 ஆண்டு மழை நீர் தேங்காதவாறு அனைத்து பணிகளை செய்து இருந்தோம். மேலும் ஸ்டெப் பார்க் அருகில் பெரிய குளம் அமைத்து மழை நீரை சேமித்து வைக்கப்படும்.
அதேபோல் ஏபிசி காலேஜ் அருகேயும் குளம் அமைத்து மழை நீரை சேமிக்கும் வழியில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பக்கீல் ஓடை மூன்று ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகிறது.

பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் கேரி பேக் கவர்களை தூக்கி எறியாமல் தூய்மை பணியாளர்களிடம் பிரித்துக் கொடுத்தால் வருங்கால சந்ததிகளுக்கு சொத்தாகவும் சுகாதாரமாகவும் தூத்துக்குடி மாநகரம் தூய்மை உள்ளதாகவும் இருக்கும் ஆகவே கேரி பேக் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூட்டத்தில் மேயர் தெரிவித்தார்.


