உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பம்
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பம் அளிக்க குவிந்த மகளிர்…
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வழுதலம்பட்டு ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகைக்காக அகரம், அன்னதானம்பேட்டை, வழுதலம்பட்டு, உள்ளிட்ட ஊராட்சிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பெண்கள் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.
மேலும் மருத்துவ காப்பீடு, பட்டாமாற்றம், வீட்டுமனை பட்டா, பசுமை வீடுகள் திட்டம், ஆதார் அட்டை பெயர் திருத்தம், உள்ளிட்ட அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்களை பெற விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பொதுமக்கள் அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

இந்த முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் நேரடியாக பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்தனர்.


