கொங்கரப்பட்டு ஸ்ரீ பொன்னியம்மன் ஸ்ரீ மாரியம்மன் ஆலய மஹா பிரம்மோற்சவ திருவிழா
கொங்கரப்பட்டு ஸ்ரீ பொன்னியம்மன் ஸ்ரீ மாரியம்மன் ஆலய மஹா பிரம்மோற்சவ திருவிழா விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் கொங்கரப்பட்டு கிராமம் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஸ்ரீ மாரியம்மன் ஆலய பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை ஸ்ரீ மஹா கணபதி ஹோமத்துடன் இனிதே துவங்கியது.
தொடங்குமாலை கிராம பெண்கள் ஊரணி பொங்கல் வைத்தனர். தொடர்ந்து ஸ்ரீ பூவாத்தம்மன் ஸ்ரீ கன்னியம்மன் கரகம் கிராம பெண்கள் ஊரணி பொங்கல் இட்ட பெண்களுடன் ஆலயத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.
தொடர்ந்து இரவு மூலவர் ஸ்ரீ பொன்னியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ பொன்னியம்மனுக்கு பஞ்சமுக தீபாராதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு கோயில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து முத்து பல்லக்கில் தர்பார் புஷ்ப அலங்காரத்தில் இரவு விதி உலா வரும் நிகழ்வு வானவேடிக்கை மற்றும் தாரை தப்பட்டை மயிலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் இரவு வீதி உலா நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


