திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே கிடாரம் ஒலப்பிடாரி காளியம்மன் தேர் திருவிழா
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் அடுத்த கிடாரம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஒலபிடாரிகாளியம்மன் ஆலய சித்திரை தேர் திருவிழா மிக விமர்சையாக இன்று நடைபெற்றது.
முன்னதாக கடந்த 23 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி இன்று காலை திருத்தேரில் ஓல பிடாரி காளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அப்போது மகாதீபம் காண்பிக்கப்பட்டது
இந்த திருத்தேரில் இரண்டு பக்கமும் ஓலையால் செய்யப்பட்ட பிடாரிகாளியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்களுக்கு திரு காட்சி அளித்தார் அப்போது பக்தர்கள் திருத்தேரினை தூக்கி பல்வேறு ஊர் தெருக்கலில் திருவீதி உலா துவங்கி நடைபெற்றன.
அப்போது ஊர் நடுவே உள்ள இரட்டை விநாயகர் ஆலயத்தில் மாவிளக்கு பூஜை தேங்காய் உடைக்கப்பட்டது நாளை வியாழன் கிட வெட்டும், வெள்ளி, சனிக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெருகின்றன விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.