கீழத்தெரு மாரியம்மன் கோவில் ஆடி மாத உற்சவம்
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோவில் ஆடி மாத உற்சவம் கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது நாளை தீமிதி திருவிழா நடைபெற உள்ள நிலையில் சிதம்பரம் மோட்டார் தொழிலாளர்கள் சார்பில் இசை கச்சேரி சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இதில் திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் மற்றும் தனியார் தொலைக்காட்சி பாடகர்கள் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு இசை கச்சேரியை ரசித்தனர், மூதாட்டி ஒருவர் வேல்முருகன் பாடலுக்கு நடனம் ஆடியது பார்ப்போரை நெகிழ வைத்தது.
இசை கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் திடீரென கச்சேரி மேடைக்கு சென்று நாளை நடைபெற உள்ள தீமிதி திருவிழாவில் பெண்கள் நகைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் என்ன பேசிய ஆய்வாளர், திருடர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை கொடுத்தார்.

அப்போது அவர் திருட்டு எண்ணத்தோடு யாராவது வந்திருந்தால் உடனடியாக கிளம்பி விட வேண்டும் வாகனங்கள் திருடி மாட்டிக் கொண்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்த சம்பவம் கச்சேரி பார்க்க வந்த திருடர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது.


