பாக்யலக்ஷ்மி சீரியல் கிளைமாக்ஸ்…விரைவில்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்களிடையே மவுஸ் அதிகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக 1444 Episode…களை தாண்டி ரசிகர்ளின் ஆதரவுடன் வெற்றிகரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல் அண்மை காலமாக மந்தமாக செல்வதால் ரசிகர்களும் சீரியல்..லை முடிக்கும்படி கோரிக்க வைத்துள்ளனர். இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ் மற்றும் பாக்யாவாக சுசித்ரா நடித்திருக்கிறார்.
ஒரு குடும்ப தலைவியாக கணவருடைய சப்போர்ட் இல்லாமல் தனி ஆளாக பாக்கியா பல போராட்டங்களை சந்தித்தாலும் மனம் தளராமல் தன் குடும்பத்திற்காக அனைத்தையும் தாங்கி கொண்டு தைரியமாக போராடி பெண்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுகிறார்.
இன்னும் சில நாட்களில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் நிலையில் நடிகை சுசித்ரா சீரியல்..ளுக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இன்னும் சில நாட்கள் தான் இந்த சீரியல் வரப்போகிறது என்பது பலருக்கு வருத்தமாக இருக்கிறது.
நான் எப்போதும் சொல்வது போல் எந்த ஒரு தொடக்கம் வந்தாலும் அதற்கு ஒரு முடிவும் உண்டு. முடிவு வருத்தத்தை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சதீஷ் வருத்தமாக பதிவிட்டுள்ளார்.
பாக்யலக்ஷ்மி ஸ்லாட்…டில் தனபாக்கியம்” என்ற புது சீரியல் வர போகிறது. பிக் பாஸ் அன்ஷிதா ஹீரோயினாகவும், பிரேம், குணா குமார், தர்ஷனா ஆகியோரும் நடிக்கின்றனர்.


