in

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் 5ம் நாளான இன்று பெரியாழ்வார் மங்களாசாசனம் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்…..

108 திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முதல் நாள் இரவு 16 வண்டி சப்பரமும், 2ம் நாளில் ஆண்டாள் சந்திர பிரபை வாகனத்திலும், ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும், 3ம் நாளில் ஆண்டாள் தங்க பரங்கி நாற்காலியிலும், ரெங்கமன்னார் அனுமன் வாகனத்திலும், 4-ம் நாள் விழாவில் ரெங்கமன்னார் கோவர்த்தன கிரி ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெரியாழ்வார் மங்களாசாசன வைபவம் இன்று நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் பெரியாழ்வார் எழுந்தருளினார்.

அதன்பின் ஆடிப்பூர கொட்டகையில் எழுந்தருளிய ஶ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், செண்பகத்தோப்பு காட்டழகர் கோயில் சுந்தர்ராஜபெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள், நிரெங்கமன்னார் ன்ற நாராயண பெருமாள் கோயில் திருத்தங்கல் அப்பன், ஆண்டாள் ஆகியோருக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்து வைத்தார்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

நடிகை ஸ்ரீதேவி ஆசையை நிறைவேற்றிய போனி கபூர்

அமிதாபச்சன், ஆமிர் கானுக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு பெங்களூருவில் ரூ.38 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது