நடிகை ஸ்ரீதேவி ஆசையை நிறைவேற்றிய போனி கபூர்
பாலிவுட் திரையுலகின் தயாரிப்பாளர் போனி கபூர் எடை குறைத்து slim..ஆகி ரசிகர்களைப் ஆச்சரியத்தில் அழ்த்தியுள்ளார்..
69 வயதான போனி கபூர் ஜிம்மிற்கோ அல்லது எந்த தீவிர உடற்பயிற்சியையும் செய்யாமலோ சுமார் 26 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார்.
அதற்கு காரணம், உணவுமுறை மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்கள் தான் என்று கூறுகிறார்.
போனி கபூரின் மெலிதான, தோற்றத்தின் புகைப்படங்கள் இப்போது வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது, பல ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு …அவர் அப்படி என்ன செய்தார்? என்று Comments செய்திருக்கின்றனர்.
போனி இரவு உணவை சாப்பிடுவதை விட்டுவிட்டார். இரவு உணவுக்கு பதிலாக, சூப் மற்றும் சாலடுகள் போன்ற உணவுகளையே சாப்பிடுகிறார்.. தேநீர், காபி முற்றிலுமாக தவிர்த்துவிட்டார்.
பழச்சாறுகள் மற்றும் சப்பாத்தியும் காலை உணவாக எடுத்துகொள்கிறார். மதியம் எளிய உணவையும். காரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நடக்கத் தொடங்கி இருக்கிறார்.
ஒரு நேர்காணலில், போனி தனது மாற்றத்திற்குப் பின்னால் உள்ள உண்மையை மனம் திறந்து பேசினார். தனது மறைந்த மனைவி நடிகை ஸ்ரீதேவி, எடையைக் குறைக்க தன்னை வற்புறுத்தினார். “என் மனைவி ஸ்ரீ என்னிடம், ‘போனி, முதலில் எடையைக் குறை, பிறகு உன் தலைமுடியைச் சரி செய்’ என்று கூறுவார்,” அவர் ஆசையை இப்பொது நிறைவேற்றிவிட்டேன்.


