சிறுணாம்பூண்டி அருள்மிகு ஸ்ரீ ஜடாமுனிஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா
செஞ்சி அடுத்த சிறுணாம்பூண்டி அருள்மிகு ஸ்ரீ ஜடாமுனிஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சிறுணாம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஜடாமுனிஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக ஶ்ரீ ஜடா முனீஸ்வரர் கோயிலில் யாக சாலை பூஜையில் கணபதி ஹோமம், கோபூஜை, யந்திர ஹோமம் போன்ற பூஜைகள் செய்யப்பட்டு,மேள தாளங்கள் முழங்க கலச புறப்பாடு நடைபெற்றது.
பின்னர் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் எடுத்து கோவிலை மூன்று முறை வலம் வந்து ஸ்ரீ ஜடாமுனிஸ்வரர் சுவாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறுணாம் பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது …
நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர் …


