வீட்டில் துன்புறுத்தல்கள்…. உதவி கோரும் தனுஸ்ரீ தத்தா
தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் விஷால் உடன் நடித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா.
இவர் ஹிந்திலும் நடித்து பிரபலமானவர். நடிகர் நானா படேகர் மீது 2018..டில் Mee Too ..வில் புகார் கொடுத்தார்.
புகார் கொடுத்ததில் இருந்து தன்னை வீட்டு அருகில் இருப்பவர்கள் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று கண்ணீருடன் இன்ஸ்டா…வில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தன்னை கொடுமைப்படுத்துவதாக வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
2020 முதல் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் என் கூரைக்கு மேலேயும் என் கதவுக்கு வெளியேயும் இதுபோன்ற சத்தங்களை, எதிர்கொண்டு வருகிறேன் ! கட்டிட நிர்வாகத்திடம் புகார் செய்து சோர்வடைந்து விட்டேன், சில வருடங்களுக்கு முன்பு அதை கைவிட்டேன்.
இப்போது நான் அந்த சத்ததின்னுடன் வாழ்கிறேன், என் மனதைத் திசைதிருப்பவும், மந்திரங்கள் கொண்ட ஹெட்ஃபோன்களை அணிந்திருக்கிறேன். இன்று நான் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் இந்த சத்தத்தால் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ச்சியான மன அழுத்தம் மற்றும் பதட்டத்தால் எனக்கு உடல்நலம் பாதிப்படைந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.


