ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 8-ம் ஆண்டு தேர் திருவிழா மீனாட்சி அலங்காரம்
ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 8-ம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் இரவு வீதி உலா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய எட்டாம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு மூலவஸ்தி முத்தாலம்மன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் தங்கக் கவசத்தில் காட்சியளித்த ஸ்ரீ முத்தாலம்மனுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக குண்டத்தில் பல்வேறு வகையான திரவிய பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் பழங்கள் மற்றும் பூர்ணாஹூகுதி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார். மேலும் மகா தீபாராதனை, நட்சத்திர தீபம், கும்ப தீபம், சத்திரங்கள் கொண்டு சோடச உபசாரம், மற்றும் பஞ்சமுக தீபாரதனை கற்பூரத்தை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ முத்தாலம்மனுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு இரவு விதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


