ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுவிட்டு போராட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி பசுமை முறையில் மீண்டும் இயக்க வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுவிட்டு போராட்டம்.
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி சுற்றுவட்டார கிராம மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் என பலரும் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து இன்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க கோரி ஏராளமான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி கோசமிட்டனர். ஆலை மூடப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர்.
எனவே ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் கிராமங்கள் மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு செய்து வரக்கூடிய நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

நிபுணர் குழு பசுமை முறையில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க வழிவகை விடுத்துள்ள நிலையில் உடனடியாக ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று கோரிக்கை வலியுறுத்தினர்.


