in

டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்ட அடுத்த தினமே களைகட்டிய கள்ளச் சந்தை

டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்ட அடுத்த தினமே களைகட்டிய கள்ளச் சந்தை

 

மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்ட அடுத்த தினமே களைகட்டிய கள்ளச் சந்தை மதுபான விற்பனை, காலை ஆறு மணி முதல் டாஸ்மார்க் கடை அருகில் திறந்த வெளியில் மதுபானம் விற்கும் நேரடி காட்சிகள் வெளியீடு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல்துறை டிஎஸ்பி சுந்தரேசன் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் கடந்த நவம்பர் மாதம் மயிலாடுதுறையில் பதவி ஏற்றதில் இருந்து மயிலாடுதுறை பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 23 பார்களை பூட்டி சீல் வைத்தார். இது ஆளுங்கட்சி நிர்வாகிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இவரை மாறுதல் செய்வதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்த நிலையில், காவல்துறை மேலதிகாரிகள் அழுத்தம் காரணமாக இவரது வாகனம் பிடுங்கப்பட்டது. தொடர்ந்து உளவுத்துறை ஐஜி செந்தில்வேல், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஆகியோர் வற்புறுத்தலின் பேரில் தான் பழிவாங்கப்படுவதாக இவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

இதனைத் தொடர்ந்து அவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்து இருந்தது. இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அடுத்த நாளிலிருந்து மயிலாடுதுறை பகுதியில் பூட்டி கிடந்த சட்டவிரோதப்பார்களை திமுகவினர் மீண்டும் திறந்து விட்டனர். குறிப்பாக சித்தர்காடு பகுதியில் காவிரிக்கரை அருகில் செயல்படும் டாஸ்மார்க் கடையில் பொது வெளியில் அட்டைப் பெட்டியில் வைத்துக் கொண்டு டாஸ்மார்க் சரக்கு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இரவு கணக்கு முடித்து செல்லும் டாஸ்மாக் சூப்பர்வைசர் எந்த விதத்தில் இவ்வாறு அதிகப்படியான மதுபான பாட்டில்களை விற்பனை செய்ய அனுமதித்தார் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டிஎஸ்பி சஸ்பெண்ட் ஆர்டர் கைக்கு வருவதற்கு முன்பே திமுகவினர் பார்களை திறந்து விட்டனர் என்றால் இன்னும் சில நாட்களில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கும் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தற்பொழுது வெட்ட வெளியில் மதுபானம் விற்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

What do you think?

 மாநகராட்சிக்கு அளித்த புகாரை அலட்சியமாக விட்டதால் மாணவிகளுக்கு நேர்ந்த ஆபத்து

பூம்புகாரில் வன்னிர் சங்க மகளிர் பெருவிழா மாநாடு பந்தக்கால் நடப்பட்டது